கங்கையில் நீராடி கட்டிட தொழிலாளர்களுடன் மோடி மதிய உணவு அருந்தினார்
1 min read
Modi had lunch with construction workers swimming in the Ganges River
13.12.2021
வாரணாசியில் ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோவில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனை அடுத்து கங்கையில் நீராடிய அவர் வாரணாசியில் கட்டுமான தொழிலாளர்களுடன் மோடி மதிய உணவு அருந்தினார்
காசி விஸ்வநாதர் கோவில்
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு, கங்கை நதிக்கரையிலிருந்து செல்லும்போது, குறுகிய தெருக்கள் வழியாகவும், சாலை வழியாகவும் செல்ல வேண்டியதிருந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
இதையடுத்து, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் கடந்த 2019, மார்ச் 8-ம் தேதி ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி சென்றார்.
அங்கு கங்கையில் நீராடினார். பின்னர் அங்குள்ள கால பைரவர் கோவிக்கு சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அங்கு ஆரத்தி எடுத்து கால பைரவர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்தார்.
உணவு அருந்தினார்
வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோயில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுடன் சேர்ந்து மதிய உணவை பிரதமர் அருந்தினார்.