July 9, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு பயந்து குடும்பத்தினரை கொன்ற டாக்டர் பிணமாக மீட்பு

1 min read

Rescue of corpse of doctor who killed family for fear of corona

13.12.2021
கொரோனா யாரையும் விட்டுவைக்காது என கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்தினரை கொடூரமாக கொன்ற டாக்டர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொடூர கொலை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண் பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் டாக்டர் சுஷில் சிங் (வயது 55) . இவரது மனைவி சந்திரபிரபா(வயது 50) மகன் ஷிகார் சிங் (வயது 21) மகள் குஷி சிங் (வயது 16).

இதற்கிடையில், கடந்த 3-ம் தேதி சுஷில் சிங் தனது மனைவி, குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்து தப்பியோடினார். ’டீ’ யில் மயக்க மருத்து கொடுத்து மனைவி சந்திரபிரபாவை சுத்தியலால் அடித்தும், மகன் ஷிகார் சிங், மகள் குஷி சிங் ஆகிய இருவரையும் கழுத்தை நெரித்தும் சுஷில் சிங் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கொரோனாவுக்கு பயந்து

இந்த கொலை தொடர்பாக சுஷில் சிங் எழுதிய கடிதத்தத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தான் குணப்படுத்தமுடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மன அழுத்தத்தில் உள்ளதாகவும் கூறிய சுஷில், ‘கொரோனா யாரையும் விட்டுவைக்காது. எனது குடும்பத்தை பிரச்சினையில் விட்டுவிட்டு செல்ல விரும்பவில்லை. அவர்களை விடுதலை செய்து பிரச்சினைகளில் இருந்து வெளியேற்ற விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த பின்னர் வீட்டில் இருந்து வெளியேறிய சுஷில் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தலைமறைவான சுஷிலை தீவிரமாக தேடி வந்தனர்.

பிணமாக…

இந்நிலையில், கான்பூர் மாவட்டம் சித்நாத் ஹட் பகுதியில் அழுகிய நிலையில் சுஷில் சிங் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சித்நாத் ஹட் பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அழுகிய நிலையில் பிணம் கிடப்பதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிணமாக மீட்கபட்ட நபர் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய டாக்டர் சுஷில் சிங் என்பது தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட உடல் மிகவும் மோசமான நிலையில் சிதைந்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், சுஷில் சிங்கின் ஆதார் அட்டை, செல்போன், டிரைவிங் லைசன்ஸ் உள்பட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.