புளியங்குடியில் சமரசம் செய்ய முயன்ற தொழிலாளி கொலை; முதியவர் கைது
1 min read
Worker killed trying to reconcile in Puliyangudi; The old man was arrested
13/12/2021
புளியங்குடியில் வெல்டிங் பட்டறை தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முதியவரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
தென்காசி மாவட்டம் புளியங்குடி தேவர் கிணற்று தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 58). வெல்டிங் பட்டறை தொழிலாளி. காந்தி பஜார் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (63). சிற்பக்கலை தொழிலாளி.
சுந்தரம், புளியங்குடி மெயின் ரோட்டில் ராசுகுட்டி என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு முருகேசன் வந்தார். 2 பேரும் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதை முருகேசன் பார்த்தார். அவர் அவர்களுக்குள் சமரசம் செய்ய முயன்றார்.
கொலை
அவர் சுந்தரத்திடம், ஏன் தேவையில்லாமல் ராசுகுட்டியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டுள்ளார்.
இதனால் சுந்தரம் ஆத்திரம் அடைந்தார். அவர் முருகேசனிடம், எங்கள் விஷயத்தில் நீ ஏன் தலையிடுகிறாய்? என்று கூறி அவரை பிடித்து தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து போன முதியவரை போலீசார் கைது தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.