நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிளை கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை; பேரணிக்கு பிறகு ராகுல் காந்தி பேச்சு
1 min read
Opposition in Parliament is not allowed to question; Rahul Gandhi’s speech after the rally
14/12/2021
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிளை கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

எம்.பி.க்கள் இடைநீக்கம்
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர். 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினை எழுப்பி உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். அதேசமயம் மன்னிப்பு கேட்க முடியாது என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டன.
பேரணி
இந்தநிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியதும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் எழுப்பினர். பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணி நடத்தினர். இந்த பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன் பின்னர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது:-
கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை
12 எம்.பி.க்கள் இடைநீக்கம் இந்திய மக்களின் குரல் நசுக்கப்பட்டதன் அடையாளமாகும். அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்க கோரிக்கை வைத்தால் ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது. நாங்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்க முயற்சி செய்தால் அவர்கள் அனுமதிப்பதில்லை.
மோடி பங்கேற்கவில்லை
அமளிக்கு பின்னரே நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது நாடாளுமன்றத்தை நடத்தும் முறையல்ல. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையையும் எழுப்ப எங்களுக்கு அனுமதிப்பதில்லை. இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலை. நாடாளுமன்ற கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.