பசுவை பாதுகாக்க மக்கள் “வாள்” வைத்துக் கொள்ளவேண்டும்; விஸ்வ இந்து பரிஷத் பெண் நிர்வாகி பேச்சு
1 min read
People must keep the “sword” to protect the cow; Visva Hindu Parishad female executive speech
14/12/2021
பசுவை பாதுகாக்க மக்கள் ‘வாள்’ வைத்துக்கொள்ளவேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் பெண் நிர்வாகி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஸ்வ இந்து பரிஷத்
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் பெண் நிர்வாகியான சாமியார் சரஸ்வதி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய சரஸ்வதி, பசுவை பாதுகாக்க மக்கள் ஆயுதத்தை வைத்துக்கொள்ளவேண்டும்’ என்றார்.
இது தொடர்பாக சாமியார் சரஸ்வதி கூறுகையில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான செல்போன்களை வாங்க மக்களிடம் பணம் இருக்கும்போது, அவர்கள் பசுக்களை பாதுகாக்க ஆயுதங்களை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இது தங்கள் தெய்வீக தாயை பசு வதை செய்வதில் இருந்து மக்கள் தடுப்பதை உறுதி செய்யும். பசுவை பாதுகாக்க மக்கள் வாள் ஆயுதத்தை வைத்துக்கொள்ளவேண்டும்’ என்றார்.