இன்னும் 6 மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை சீரம் நிறுவனம் அறிமுகம் செய்கிறது
1 min read
Serum is introducing a vaccine for babies in 6 more months
14.12.2021
இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ மற்றும் சைடஸ் கடிலா நிறுவனத்தின் ‘சைகோவ் – டி’ ஆகிய குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனை ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளன.’கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் இந்தியா நிறுவனம் ‘கோவோவாக்ஸ்’ என்ற குழந்தைகளுக்கான தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதை, 12 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்தி, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள சீரம் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்திருந்தது.
6 மாதங்களில்..
இந்நிலையில் சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா, இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தற்போது பரிசோதனையில் உள்ள இந்த தடுப்பூசி நல்ல செயல்திறன் கொண்டிருப்பதாகவும் அடர் பூனவல்லா தெரிவித்தார்.