ஸ்டாலினுடன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சந்திப்பு
1 min read
Telangana Chief Minister Chandrasekara meets Stalin
14.12.2021
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சந்தித்து பேசினார்.
சந்திரசேகரராவ்
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
இன்று (டிச. 14) சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
முன்னதாக நேற்று அவர் நிருபர்களிடம் கூறும்போது, “ஸ்ரீரங்கம் கோவிலுக்கு, இரண்டாவது முறை வந்துள்ளேன். கோவிலை சிறப்பாக பராமரித்து வரும் தமிழக அரசுக்கு நன்றி. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின், முதல் முறை தமிழகம் வந்துள்ளேன்.” என்றார்.