எதிர்க்கட்சி அமளியால் மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு
1 min read
Lok Sabha adjourned till tomorrow due to opposition amalgamation
15.12.2021
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் முடங்கியது. இன்று காலை மக்களவை தொடங்கியதில் இருந்து லக்கிம்பூர் வன்முறை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், காலை முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பிற்பகல் கூட்டம் தொடங்கியபோது அவைத் தலைவரின் இருக்கையின் முன்பு நின்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.