பறவை காய்ச்சல் எதிரொலியாக 55,000 வாத்துகளை கொல்ல கேரள அரசு முடிவு
1 min read
The Kerala government has decided to kill 55,000 ducks in the aftermath of bird flu
15.12.2021
பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆலப்புழாவில் 20,000 வாத்துகளையும், கோட்டயத்தில் 35,000 வாத்துகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல்
ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்துகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த கால்நடை மருத்துவர்கள் அந்த பறவைகளின் மாதிரிகளை கால்நடை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில், அந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது மனிதர்களையும் பாதிக்கும் என்பதால் உடனடியாக இந்த பறவைகளை அழிக்க ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாத்துக்கள் அளிக்கப்பட்டன. மேலும் கோட்டயம் மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.
வாத்துக்களை கொல்ல முடிவு
இந்த கூட்டத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக ஆலப்புழாவில் 20,000 வாத்துகளையும், கோட்டயத்தில் 35,000 வாத்துகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோட்டயத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பறவை இறைச்சி, முட்டைகள் விற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
மேலும் இது போன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பறவைகளின் இறைச்சி, முட்டைகள் விற்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. மேலும் பண்ணைகளில் உள்ள பறவைகளுக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.