July 10, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 7,447 பேருக்கு கொரோனா; 391 பேர் சாவு

1 min read

Corona for 7,447 newcomers in India; 391 deaths

17.12.2021
இந்தியாவில் புதிதாக 7,447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளில் 391 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 7 ஆயிரத்து 974-ஐ விட குறைவாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 61 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7 ஆயிரத்து 886 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 62 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 86 ஆயிரத்து 415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

391 பேர் சாவு

கொரோனா தாக்குதலுக்கு நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 391 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 76 ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.