சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு 5 மாதம் அவகாசம் ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
1 min read
Madurai branch of the court has given 5 months to hear the Sathankulam case
19.12.2021
சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு குறித்த வழக்கை 5 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தந்தை-மகன் கொலை
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை விசாரணை முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு 5 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான பொருட்களின் தடய அறிவியல் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. செல்போன் உள்ளிட்ட உபகரணங்களில் அழிக்கப்பட்ட விவரங்கள் கிடைத்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கில் 105 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவரை 20 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது என கோர்ட்டு தரப்பில் தெரிவிகப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஒருவரிடம் மட்டுமே விசாரணை நடைபெறுவதாக கீழமை நீதிமன்றம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரவு
உத்தரவு நகல் கிடைத்த 5 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.