இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 100- ஐ தாண்டியது
1 min read
Omegron exposure in India exceeds 100
17/10/2021
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 100- ஐ தாண்டியது எனறும் எனவே அவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஒமைக்ரான்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என பரவியது. நேற்று முன்தினம் வரையில் நாடு முழுவதும் 82 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 101- ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 32, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் தலா 8 பேருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மக்கள் அவசியமின்றி பயணிப்பதை தேவையின்றி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.