அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
1 min read
Agni Prime missile test success
18.12.2021
அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
ஏவுகணை
அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட அக்னி பிரைம் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. ஒடிசாவில் உள்ள பாலசோர் கடற்கரையில் இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றது. அக்னி ஏவுகணைகளில் அதி நவீனமான அக்னி பிரைம் 2,000 கி.மீட்டர் வரை பாய்ந்து இலகக்கை தாக்கக் கூடியது.
அக்னி பிரைம் ஏவுகணை என்பது இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள அக்னி ஏவுகணைகளை விட மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை வகையாகும். அக்னி ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதையடுத்து, ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி கழகத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளது.