இந்தியாவில் புதிதாக 7,145 பேருக்கு கொரோனா; 289 பேர் சாவு
1 min read
Corona for 7,145 newcomers in India; 289 deaths
18.12.2021
இந்தியாவில் புதிதாக 7,145 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் 243 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 289 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,145 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்த பாதிப்பு 3 கோடியே 47 லட்சத்து 33 ஆயிரத்து 194 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 243 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 289 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,77,158 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 8,706 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 71 ஆயிரத்து 471 ஆக உயர்ந்தது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 84,565 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 569 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.
தடுப்பூசி
நாடு முழுவதும் நேற்று 62,06,244 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 136 கோடியே 66 லட்சத்தை கடந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 66.28 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 12,45,402 மாதிரிகள் அடங்கும்.