July 10, 2025

Seithi Saral

Tamil News Channel

2 ஆண்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்

1 min read

2 men were married with parental consent.

20.12.2021-

இரண்டு ஆண்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஓரின சேர்க்கை

இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் சட்டப்பூர்வமாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஐதராபாத் புறநகரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அபய் டாங்கே (வயது 34) மற்றும் சுப்ரியோ சக்ரவர்த்தி (31) ஆகிய இரு ஆண்களும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இவர்களது திருமணம் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது.விழாவில் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர். இந்த விழாவில் 60 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தினர்.

8 ஆண்டுகால நண்பர்கள்

சுப்ரியோவும் அபயும் தங்களின் எட்டு ஆண்டு கால நட்புக்கு பிறகு இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர். பஞ்சாப்பை சேர்ந்த அபய், ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர். சுப்ரியோ மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் . இதனால் இவர்களது திருமணம் மேற்குவங்காளம் மற்றும் பஞ்சாபி பாரம்பரியத்துடன் நடைபெற்றது.

திருமண கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மெஹந்தி மற்றும் சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன, இதில் எல்ஜிபிடீ (LGBT) சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
சுப்ரியோவின் பெற்றோர் ஆரம்பத்தில் அவருக்கு ஆதரவளிக்கவில்லை, ஆனால் பின்னர் அவர்களது உறவை ஏற்றுக்கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.