தமிழ்நாட்டில் இன்று 605 பேருக்கு கொரோனா; 6 பேர் சாவு
1 min read
Corona for 605 people in Tamil Nadu today; 6 deaths
20/12/2021
தமிழ்நாட்டில் இன்று 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 40 ஆயிரத்து 411 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 697 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 96 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தாக்குதலுக்கு இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.