அரக்கோணத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன் கைது
1 min read
Husband arrested for watching YouTube and giving birth to wife
20.12.2021
அரக்கோணத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரசவம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். அதே பகுதியில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வரும் இவருக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதற்கிடையில், கர்ப்பமுற்ற அவரது மனைவிக்கு கடந்த 13-ஆம் தேதி பிரசவம் நாள் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18-ஆம் தேதி மாலை அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
பிரசவ வலி ஏற்பட்டபோதும் மனைவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு லோகநாதன் அழைத்துசெல்லவில்லை. அவர் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். யூடியூபை பார்த்து லோகநாதன் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இந்த விபரீதத்தால் லோகநாதனின் மனைவிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரது மனைவியும் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, லோகநாதன் தனது மனைவியை மயங்கிய நிலையில் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். அங்கு லொகநாதனின் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இந்நிலையில், மனைவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்தில் குழந்தை இறந்த சம்பவம் குறித்து லோகநாதனிடம் நெமிலி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த லோகநாதனை போலீசார் கைது செய்தனர்.