நடிகை ஐஸ்வர்யா ராய், வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கி வதை்திருப்பதாக குற்றச்சாட்டு
1 min read
Popular actress Aishwarya Rai has been accused of hoarding assets abroad
20.21.2021
வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கி வைத்த குற்றச்சாட்டின் பேரில் ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ராய்
இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், செல்வந்தர் கள் பனாமா நாட்டில் கருப்பு பணத்தை முதலீடு செய்திருப்பதாக கடந்த 2016- ஆம் ஆண்டு புகார் எழுந்தது. பனாமாவில் முதலீடு செய்தவர்களின் பெயர் பட்டியலை ஜெர்மனியை சேர்ந்த பத்திரிகை வெளியிட்டது. அதில் நடிகை ஜஸ்வர்யா ராய் உட்பட 500 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
சம்மன்
பனமா பேப்பர்ஸ் வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஐஸ்வர்யா ராய் ஆஜராக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கி வைத்த குற்றச்சாட்டின் பேரில் ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.