20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு
1 min read
Central government orders disabling of 20 YouTube channels and 2 websites
21.12.2021
இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
யூ டியூப் சேனல்கள்
இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் போராட்டம், ராமர் கோவில், உள்பட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பொய்யான தகவல்களை பதிவிட்டு வந்த சேனல்களை முடக்கி மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் நயா பாகிஸ்தான் குழுமத்திற்கு சொந்தமான யூடியூப் சேனல்கள் மற்றும் வேறு சில யூடியூப் சேனல்கள் என மொத்தம் 20 யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்த சேனல்களின் மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 50 கோடி வரை இருக்கும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.