தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகள்
1 min read
Daughter remarried to mother
21.12.2021
தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகளின் சமூக வலைத்தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாயக்கு மறுமணம்
இந்தியாவில் பெண்களுக்கு மறுமணம் என்பது இன்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்றைய இளைஞர்கள் சமூக சிந்தனையுடன் எடுக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்படுகிறது. பெறும் வரவேற்பையும் பெறுகிறது. அப்படி ஒரு சம்பவம் சமீப காலங்களில் நடைபெற்று வருகிறது.
அண்மையில் தமிழ்நாட்டில் தனது தாயின் திருமணத்திற்கு மகன் தாலி எடுத்துக் கொடுத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் தனது தாய்க்குப் பெண் ஒருவர் வரன் தேடியதும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இளம் பெண் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது தாயின் திருமண நிகழ்வுகள் குறித்துப் பதிவிட்டது இணையத்தில் வைரலாகி பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
மேலும், திருமணம் தொடர்பான சில வீடியோக்களையும் அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, தனது தாயின் புதிய வாழ்க்கை தொடங்குவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் திருமண வாழ்த்து தெரிவித்து அந்த பெண்ணுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.