தேர்தல் சீர்திருத்த மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்
1 min read
Electoral Reform Bill passed in Parliamentary States
21.12.2021
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது.
தேர்தல் சீர்திருத்த மசோதா
தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்திருப்பதும் ஆகும்.இதை தடுப்பதற்காகவும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதற்காகவும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் முடிவு செய்தது. அதன்படி உருவாக்கப்பட்ட தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021-க்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.
இந்த மசோதாவை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்தார். மாசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மக்களவையில் இந்த மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவை
இந்த நிலையில், மாநிலங்களவையில் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் , இனி ஜனாதிபதி ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப் படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகு மசோதா சட்டமாகும்