இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் லட்சத்தீவில் வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து
1 min read
Holidays canceled on Friday in Lakshadweep, a Muslim-majority state
21.12.2021
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் லட்சத்தீவில் பல தசாப்தங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை
பல நாடுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் லட்சத்தீவு பகுதியில் அதிகமாக இஸ்லாமியர்கள் உள்ள நிலையில் அங்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் லட்சத்தீவில் இனி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது என்று லட்சத்தீவு கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி லட்சத்தீவுகளில் உள்ள பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாட்கள் என்றும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் இனி விடுமுறை என்று அறிவிக்கும் புதிய நாள் காட்டியை லட்சத்தீவு கல்வித் துறை வெளியிட்டுள்ளது.