கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மரணம்
1 min read
Karunanidhi’s aide Shanmuganathan dies
21.12.2021
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த கோ.சண்முகநாதன் மரணம் அடைந்தார்.
கருணாநிதி
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் உதவியாளாராக இருந்த கோ.சண்முகநாதன் காலமானார். உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதியின் நேர்முக உதவியாளராக சண்முகநாதன் இருந்தார். கருணாநிதியின் நிழல் என்றே அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்பட்ட சண்முகநாதன், 1967 ஆம் ஆண்டு முதல் கருணாநிதியின் கடைசிக்காலம் வரை உதவியாளராக இருந்தார்