July 10, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் பாரதி செல்லம்மாள் சிலை அமைக்க அரசு அனுமதி; அக்ரஹாரத்தில் இடம் இல்லை

1 min read

Government gives permission to erect statue of Bharathi Sellammal in Kadayam; There is no place in Agraharam

22.12.2021
கடையத்தில் பாரதியார்-செல்லம்மாள் சிலை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அக்ரஹாரத்தில் இல்லை.

கடையத்தில் பாரதி

மகாகவி பாரதியார் எட்டயபுரத்தில் பிறந்தார். அவர் கடையத்தைச் சேர்ந்த செல்லம்மாளை திருமணம் செய்தார். இதனால் அடிக்கடி கடையம் வருவது உண்டு. சுதந்திர போராட்டத்தின்போது மக்களை தட்டி எழுப்பும் கவிதையை படைத்ததால் அவரை பிரிட்டிஷ் அரசு கைது செய்ய முனைந்தது. இதனால் பிரெஞ்சு ஆதிக்கத்தில் உள்ள பாண்டிச்சேரிக்கு சென்றார். அங்கிருந்து சொந்த ஊர் வரும்போது கடலூரில் போலீசார் அவரை கைது செய்தனர். அதன்பின் அவரை கடையத்தில் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்தனர்.
சுமார் இரண்டாண்டு காலம் கடையத்தில் இருந்து கவிதைகள் பல புனைந்தார்.
அவர் கடையத்தில் வாழ்ந்தாலும் அவர் மற்ற தாழ்த்தப்பட்ட சாதியினருடன் நெருங்கி பழகியதால் அவரை அக்ரஹாரத்திற்குள் அவரின் உறிவினர்கள்கூட அனுமதிக்கவில்லை. கடையத்தில் உள்ள நித்திய கல்யாணி அம்மன்கோவில், பத்திரகாளி அம்மன் கோவிலில்தான் காலத்தை கழித்தார்.

பாரதி மன்றம்

கடையதில் பாரதியின் புகழை பரப்ப மறைந்த பேராசிரியர் எல்.எம்.நாராயணன் பாரதி மன்றம் அமைத்தார். பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி பாரதிக்கு பெருமை சேர்த்தார். பாரதியார் நூற்றாண்டு விழாவை சிற்பபாக நடத்தினார். அது மட்டுமின்றி கடையத்தில் பாரதியார் மண்டபம், நூல் நிலையம் அமைய பெரும் பாடுபட்டார்.
அவர் மறைந்த பின்னர் பாரதியின் புகழ்பாட ஆள் இல்லாமல் இருந்தது.

சேவாலயா

அந்தகுறையை போக்க வந்தவர்தான் சேவாலயா முரளிதன். இவர் சென்னை பகுதியை சேர்ந்தவர் என்றாலும் கடைத்தில் பாரதியாருக்கு தனது சேவாலயா மூலம் புகழ் சேர்ந்தார். பல்வேறு விழாக்களை நடத்தியுள்ளார். தற்போது பாரதியார் – செல்லம்மாள் சிலையை 7 அடி உயரத்தில் உருவாக்கியுள்ளார். அந்த சிலையை அக்ரஹாரத்தில் வைக்க பெரும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் இப்போத அந்த சிலையை தற்போதுள்ள நூலக வளாகத்தில் நிறுவ அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த நூலகம் பழுதடைந்து உள்ளது. அந்த இடத்தில் வைக்க புதிய கட்டிடம் கட்டி அதில் பாரதியார் செல்லம்மாள் சிலையை வைக்க அரசு அளித்துள்ளது.
இதுபற்றி முரளிதரன் கூறும்போது பொங்கலுக்குள் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அடிக்கல் நாட்டப்படும் என்றும் பாரதி-செல்லம்மாள் திருமண நாள் ஜூன் 27ந் தேதி வரகிறது. அன்று சிலை திருப்பு விழாவை முதல் அமைச்சர் தலைமையில் நடத்த முடிவு செய்து இருப்பதாகவும் கூறினார்.
அரசின் அனுமதி கிடைத்ததை அடுத்து அந்த இடத்தில் எப்படி மண்படம் நூல்நிலையம் சிலைபீடம் அமைக்கலாம் என்று சேவாலயம் நிறுவனர் முரளிதரன் ஆய்வு செய்தார். அப்போது துணைதலைவர் கிங்ஸ்டன் சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தான் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பாரதிக்கு தடை

பாரதியார் உயிரோடு இருந்தபோதும் அக்ரஹாரத்திற்குள் அவருக்கு அனுமதி இல்லை. இப்போதும் அக்ரஹாரத்தி்ற்குள் அவரது சிலை அமைக்க சட்டம் தடையாக உள்ளது. அதற்கு சேவாலயம் எவ்வளவோ முயற்சி செய்தும் அதற்கு சட்டம் இடம் கொடுக்கவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.