இந்தியாவில் மேலும் 6,317 பேருக்கு கொரோனா;318 பேர் சாவு
1 min read
In India, another 6,317 people died of corona; 318 died
22.12.2021-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. புதிதாக 6,317 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 318 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவலுக்கு மத்தியிலும், தினசரி கொரோனா பாதிப்பு இப்போது குறைந்து கொண்டே வருகிறது. கடந்த திங்கட்கிழமை 6,563 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 6 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இதன்படி நேற்று 5,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (இதில் கேரளாவில் மட்டும் 2,748 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 317 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,47,58,481 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 318 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,78,325 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.38 சதவீதமாக உள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 6,906 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,42,01,966 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.40 சதவீதமாக உள்ளது.
தடுப்பூசி
மேலும் கொரோனா தொற்றுக்கு கடந்த 575 நாட்களில் குறைந்தபட்ச அளவாக 78,190 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,38,95,90,670 பேருக்கு (இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,05,039 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 12,29,512 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 66,73,56,171 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.