July 10, 2025

Seithi Saral

Tamil News Channel

விக்குக்குள் வயர்லெஸ் இயர்போனை வைத்து தேர்வு எழுத வந்த வாலிபர் சிக்கினார்

1 min read

The boy who came to write the exam got stuck with a wireless earphone inside the wiki

22.12.2021

உத்திரப்பிரதேசத்தில் வயர்லெஸ் இயர்போன்களை விக்குக்குள் மறைத்து எஸ்.ஐ தேர்வு எழுத வந்த இளைஞரை கையும் களவுமாக அதிகாரிகள் பிடித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

உத்தரபிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வில் கலந்து கொள்ள வந்த மாணவர்களை போலீசார் சோதனை செய்தனர். அதில் 27 வயதுடைய இளைஞரை சோதனை செய்தனர்.

அப்போது அவர் புளூடூத் அமைப்புடன் தலையில் விக் அணிந்திருந்ததையும், காதில் இயர்போன் அணிந்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். பிடிபட்ட அந்த மாணவனின் காதுக்குள் இருந்த இரண்டு ஏர்போட்களின் அளவு மிகவும் சிறியதாக இருந்ததால் காதில் இருந்து அகற்ற முடியாமல் போனது. மாணவர் தேர்வில் ஏமாற்ற மேற்கொண்ட முயற்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இணையதளத்தில்..

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வயர்லெஸ் இயர்போன்களை விக்குக்குள் மறைத்து எஸ்ஐ தேர்வு எழுத வந்த நபர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.