இந்திய தடுப்பூசிகளுக்கு எதிராக வெளிநாட்டு நிறுவனங்கள் வேலை செய்கின்றன; தலைமை நீதிபதி ரமணா பேச்சு
1 min read
Foreign companies are working against Indian vaccines
24.12.2021
இந்திய தடுப்பூசிகளுக்கு எதிராக வெளிநாட்டு நிறுவனங்கள் வேலை செய்கின்றன என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
விருது வழங்கம் விழா
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் கிருஷ்ண எலா உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியதாவது:-
எதிராக வேலை செய்கிறார்கள்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படும் நிலையிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டதால் இந்த தடுப்பூசியை சிலர் விமர்சனம் செய்கின்றனர். இந்த தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பிலும் சிலர் புகார் அளித்துள்ளனர்.
மற்றொரு பக்கத்தில் சில வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய தடுப்பூசிகளுக்கு எதிராக வேலை செய்கின்றன. இந்திய தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கூடாது என உள்நாட்டிலேயே சிலர் நினைக்கின்றனர். சக தெலுங்கு மக்களுக்கு அதன் பெருமையை எடுத்துரைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்க வேண்டும். தாய்மொழியை ஊக்கப்படுத்த முயற்சிகள் எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.