தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என தகவல்
1 min read
No night curfew in Tamil Nadu
24.12.2021
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில்,மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை நாளை முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது.
மேலும்,திருமண விழாவில் 200 பேருக்கு மேல் பங்கேற்க தடை,ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,ஒமைக்ரான் பரவலை தடுக்க தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதித்து உத்தரபிரதேச மாநில ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ஒமைக்ரான் பரவல் மேலும் அதிகரிக்காத வகையில் அதை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு திட்டங்களை தீட்ட முன்வந்துள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நண்பகல் 12 மணியளவில் இந்த கூட்டம் நடைபெற்றது.
ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை
இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
- தொற்று 10 சதவீதம் அளவில் நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கை அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளது.
- சுகாதாரத்துறையில் ஒப்பந்த பணியாளர்களின் பணி காலத்தை மேலும் நீட்டிப்பு செய்யவும் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- தீவிர அவசர கட்டுப்பாட்டு மையங்களை மீண்டும் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒமைக்கிரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.