ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு
1 min read
Central Committee for 10 states, including Tamil Nadu, which is most affected by omega
25/12/2021
ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு வர உள்ளது.
ஒமைக்ரான்
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம்(நவம்பர்) 24-ந்தேதி முதன்முதலாக கண்டறியப்பட்டது. அது 26-ந்தேதி அது வைரஸ் திரிபு என உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டது. அதுதான் இப்போது வேகமான பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ்.
இந்தியாவில் இந்த வைரஸ் பரவல் தடுக்க விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. ஆபத்தான நாடுகள் என கண்டறியப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் கொரோனா உறுதியானால் அது ஒமைக்ரானா என கண்டறிய மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனைக்காக மரபணு பகுப்பாய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்தியாவில்…
உலகை அச்சுறுத்தி வருகிற இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் கடந்த 2-ந்தேதி கால் ஊன்றத் தொடங்கியது. முதன்முதலில் கர்நாடகத்தில் 2 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த 23 நாட்களில் நாட்டின் 17 மாநிலங்களுக்கு பரவி வேகம் காட்டி உள்ளது.
இந்த 17 மாநிலங்களிலும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 115 பேர் நலமடைந்துள்ளனர்.
தனிமைப் படுத்துதல்
இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தற்போது வெளிநாடுகளில் இருந்து யார் வந்தாலும் கண்டிப்பாக 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
நிபுணர் குழு
மேலும் ஒமைக்ரான் அதகமாக பரவிவரம் 10 மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை ஒன்றிய அரசு அனுப்பி வைக்கிறது.
இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம்
கொரோனா தடுப்பூசி குறைவாக போடும் பணிகள், கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் என அடையாளம் காணப்பட்ட சில மாநிலங்களில்10 மாநிலங்களுக்கு பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளா, மராட்டியம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரபிரசேதம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு செல்லும். இந்த குழுவானது ஒமைக்ரான் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.