டெல்லி திகார் சிறையில் செல்போனை விழுங்கிய கைதியால் பரபரப்பு
1 min read
Delhi Tihar Jail: A prisoner swallows a cellphone
7.1.2022
டெல்லி திகார் சிறையில் செல்போனை விழுங்கிய கைதியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கைதியிடம் செல்போன்
டெல்லி திகார் சிறையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளிடம் மொபைல் போன்கள் உள்ளிட்ட சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா? என சோதனை செய்யப்படுவது வழக்கம்.
இதன்படி, சிறை துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், திகார் சிறையின் எண் 1ல் இருந்த கைதியிடம் சிறிய ரக செல்போன் ஒன்று இருந்துள்ளது. அவர், அதிகாரிகள் சோதனை செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அதனை விழுங்கிவிட்டார். இதனை சிறை அதிகாரிகள் மற்றும் பிற கைதிகள் முன்னிலையிலேயே செய்துள்ளார்.
அதன்பின்பு அவரது நிலைமை மோசமடைய சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்பின்னர் கூடுதல் சிகிச்சைக்காக தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கைதி கொண்டு செல்லப்பட்டார்.
இதுபற்றி திகார் மத்திய சிறையின் இயக்குனர் சந்தீப் கோயல் கூறும்போது, செல்போனை விழுங்கிய கைதியின் நிலைமை முன்னேறியுள்ளது. மொபைல் போல் கைதியின் வயிற்றிலேயே உள்ளது. அதுவாக வெளியே வருவதற்காக மருத்துவர்கள் காத்திருக்கின்றனர். அப்படி வரவில்லை எனில், அறுவை சிகிச்சை தேவைப்படும் என்று கூறியுள்ளார்.