விமானத்தை இழுத்து செல்லும் வாகனத்தில் தீ விபத்து
1 min read
A fire broke out in a tow truck
10/1/2022
மும்பை விமான நிலையத்தில் விமானத்தை இழுத்து செல்லும் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் நூலிழையில் விமானம் தப்பியது.
புஷ்பக் டக்
விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் போது, விமானங்களை நகர்த்துவதற்காக ’புஷ்பக் டக்’ எனப்படும் வாகனம் பயன்படுத்தப்படுவது வழக்கம். மும்பை விமான நிலையத்தில் இன்று இத்தகைய இழுவை வாகனத்தில் திடீரென தீப்பற்றிக்கொண்டது. கொழுந்து விட்ட தீயை உடனடியாக அணைத்தனர்.
இழுவை வாகனத்திற்கு மிக அருகில் தான் மும்பையில் இருந்து ஜாம்நகர் செல்லும் ஏர் இந்தியா விமானம் 85 பயணிகளுடன் நின்று கொண்டிருந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.