June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா; 402 பேர் சாவு

1 min read

Corona for another 2.68 lakh people in India; 402 deaths

15.1.2022

இந்தியாவில் நேற்று காலை ஒரேநாளில் 2.64 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை தொற்று பாதிப்பு 2.68 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது நேற்றைய பாதிப்பான 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 மற்றும் நேற்று முன்தின பாதிப்பான 2 லட்சத்து 47 ஆயிரத்து 417-ஐ விட அதிகமாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 47 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 லட்சத்து 17 ஆயிரத்து 820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 85 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 156 கோடியே 2 லட்சத்து 51 ஆயிரத்து 117 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான்

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 553 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.