தமிழகத்தில் இன்று 30,744 பேருக்கு கொரோனா; 33 பேர் சாவு
1 min read
Corona for 30,744 people in Tamil Nadu today; 33 dead
22.1.2022
தமிழகத்தில் இன்று 30 ஆயிரத்து 744 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இன்றைய ஒருநாள் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 55 ஆயிரத்து 648 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 ஆயிரத்து 744 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 452 பேரும், கோவையில் 3 ஆயிரத்து 886 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 377 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 31 லட்சத்து 3 ஆயிரத்து 410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
33 பேர் சாவு
கொரோனாவுக்கு தமிழகத்தில் இன்று 33 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 178 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 94 ஆயிரத்து 697 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 23 ஆயிரத்து 372 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 28 லட்சத்து 71 ஆயிரத்து 535 பேர் குணம் அடைந்து உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,038 ஆக இருந்த நிலையில் இன்று (ஜனவரி 22 ம் தேதி) 6,452ஆக சற்று குறைந்துள்ளது.
கோவையில் 3886 பேருக்கும், செங்கல்பட்டில் 2377 பேருக்கும், கன்னியாகுமரியில் 1266 பேருக்கும், ஈரோட்டில் 1066 பேருக்கும், சேலத்தில் 1080 பேருக்கும், திருவள்ளூரில் 1069 பேருக்கும், திருப்பூரில் 1014 பேருக்கும், நெல்லையில் 828 பேருககும், தென்காசியில் 250 பேருக்கும், தூத்துக்குடியில் 351 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.