பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடம்
1 min read
Famous singer Lata Mangeshkar’s health is worrying
5.2.2022
பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
லதா மங்கேஷ்கர்
பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் லதா மங்கேஷ்கருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (வெண்டிலேட்டர்) எனவும் அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் எனவும் மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படுகிறார்.