இந்தியாவில் புதிதாக 1,07,474 பேருக்கு கொரோனா; 865 பேர் சாவு
1 min read
Corona for 1,07,474 newcomers in India; 865 deaths
6.2.2022
இந்தியாவில் மேலும் 1,07,474 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 865 பேர் இறந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4.21 கோடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 13 ஆயிரத்து 246 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4.04 கோடி ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 12 லட்சத்து 25 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 865 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 5,01,979 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 45 லட்சத்து 10 ஆயிரத்து 770 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 169.46 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.