இந்தியாவில் மேலும் புதிதாக 71,365 பேருக்கு கொரோனா
1 min read
Corona for a further 71,365 newcomers in India
9.2.2022
இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட நேற்று அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் புதிதாக 71,365 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா 3-வது அலை வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து, 67 ஆயிரத்து 597 ஆக இருந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 71,365 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று 1,188 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதிப்பால் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,217 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,05,279 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,72,211 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவில் தற்போது 8,92,828 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 1,70,87,06,705 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 53,61,099 டோஸ் போடப்பட்டுள்ளது.நாட்டில் கொரோனா பரவல் விகிதம் 4.54 சதவீதமாக உள்ளது
மேற்கண்ட தகவலை இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது,