தமிழகத்தில் தினசரி கொரோனா இன்று 3,971 ஆக குறைந்தது; 18 பேர் சாவு
1 min read
The daily corona in Tamil Nadu has dropped to 3,971 today; 18 deaths
9.2.2022
தமிழகத்தில் இன்று 3,967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர். 16,473 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 4,519 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 3,971 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,10,494 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 3,967 பேரும் மேற்குவங்கம் 2, ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் மாநிலம் சென்று திரும்பிய தலாஒருவரையும் சேர்த்து 3,971 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,24,476ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 2,363 பேர் ஆண்கள், 1,608 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 19,98,540 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 14,25,898 ஆகவும் அதிகரித்து உள்ளது. 16,473 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,09,032 ஆக உயர்ந்துள்ளது.
28பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 12பேரும் , அரசு மருத்துவமனையில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,837 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 792 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 9 ம் தேதி) 742ஆக குறைந்துள்ளது.
நெல்யைில் இன்று 43 பேருக்கும், தென்காசியில் 10 பேருக்கும், தூத்துக்குடியில் 26 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.