July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

மோசடி புகாரால் இலங்கை அழகியின் பட்டம் பறிப்பு

1 min read

Sri Lankan beauty’s degree snatched by fraud complaint

10.2.2022
மோசடி புகார் காரணமாக இலங்கை அழகியின் பட்டம் பறிக்கப்பட்டது.

அழகி பட்டம்

‘திருமதி இலங்கை 2021’ அழகி போட்டியில் பட்டம் வென்றவர் புஷ்பிகா டி சில்வா.
இவர் கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாவில் நடந்த ‘திருமதி உலக அழகி’ போட்டியில் பங்கேற்றார். இந்த பட்டத்தை வெல்ல திருமணமான பெண்கள் மட்டுமே போட்டியிட்டனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஷைவின் போர்டு ‘திருமதி உலக அழகி’ பட்டத்தை வென்றார்.

இந்த போட்டியில் நடுவர்கள் முறைகேடாக செயல்பட்டதால்தான் தனக்கு வெற்றி கிட்டவில்லை என்று புஷ்பிகா டி சில்வா சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டினார்.

தடை

அவரது இந்த கருத்து உலகளாவிய அளவில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இலங்கையின் போட்டி அமைப்பாளர் அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து புஷ்பிகா டி சில்வாவின் ‘திருமதி இலங்கை’ பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பட்டத்தை விளம்பரங்களுக்காக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

புஷ்பிகா டி சில்வா ஏற்கனவே ‘திருமதி இலங்கை’ பட்டத்தை பெற்ற போது மேடையிலேயே அவரது கிரீடத்தை கரோலின் ஜுலி என்பவர் பறித்தார்.
புஷ்பிகா போட்டிக்கான விதிமுறையை மீறி விட்டார். இந்த போட்டியில் திருமணம் ஆனவர்தான் பங்கேற்க வேண்டும். ஆனால் புஷ்பிகா விவகாரத்தானவர் என்று கூறினார்.
இந்த நிலையில் தனக்கு விவாகரத்து ஆகவில்லை. கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதாக புஷ்பிகா விளக்கம் அளித்ததை தொடர்ந்து அவருக்கு ‘திருமதி இலங்கை’ பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரிடம் இருந்து மீண்டும் ‘திருமதி இலங்கை’ பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.