July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

மேற்கு வங்க சட்டசபை முடக்கம்: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

1 min read

West Bengal Assembly freeze: Chief Minister Stalin protests

13.2.2022
மேற்கு வங்க சட்டசபையை முடக்கி, அம்மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் முடக்கியதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மேற்கு வங்க சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைத்த கவர்னரின் செயல், உயர்ந்த பதவியில் இருந்து எதிர்பார்க்கப்படும் எந்த உரிமையும் இல்லாமல், நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது.

அரசியலமைப்பு சட்டத்தை நிலை நிறுத்த மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய தலைவர் , மாநில அரசுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். மாநில அரசுடன் கவர்னர் இணைந்து பணியாற்றுவதில் தான் ஜனநாயகம் மேலும் அழகுறும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.