திருப்பதி திருமலை முழுவதும் அன்னதானம் வழங்க அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு
1 min read
It was decided at the Board of Trustees meeting to provide alms throughout Tirupati Thirumalai
18.2.2022
திருமலை முழுவதும் தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்க அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
திருமலை திருப்பதியில் நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில், 2022-23 நிதியாண்டிற்கான 396 கோடி ரூபாய் பட்ஜெட்டை தேவஸ்தான அதிகாரிகள் தாக்கல் செய்தனர். அதற்கு ஒப்புதல் அளித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது.
மேலும் திருமலையில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல்கள் இல்லாமல், திருமலை முழுவதும் தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்க அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, திருமலைக்கு செல்ல 3-வது மலைப்பாதை விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.