July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் உள்ள பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்த சதி – என்.ஐ.ஏ அதிர்ச்சி தகவல்

1 min read

Conspiracy to attack celebrities in India – NIA shocking information

20.2.2022

இந்தியாவில் உள்ள பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்த சதி செய்திருப்பதாக என்.ஐ.ஏ வெளியிட்ட அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பிரபலங்கள்

இந்தியாவில் உள்ள பிரபலங்கள் மீது தனிக்குழு அமைத்து தாக்குதல் நடத்தவும், பயங்கரவாதத்தை பரப்பவும் சிறப்பு குழு ஒன்றை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அமைத்துள்ளதாக தேசிய விசாரணை அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், தாவூத் இப்ராஹிம் இந்த சிறப்பு குழு மூலம் நாடு முழுவதும் பயங்கரவாதத்தை பரப்பி வருகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.

தாக்குதல்

இதுகுறித்து என்.ஐ.ஏவிற்கு கிடைத்த தகவலின் படி, டெல்லி மற்றும் மும்பையில் வசிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளை இந்த குழு குறிவைத்துள்ளது. இந்த குழு இந்தியா முழுவதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ முழுமையான விசாரணை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்அளித்துள்ளது. இதனையடுத்து தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள், அவர்களுடைய டி-கம்பெனி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, தேசிய விசாரணை அமைப்பு (என்.ஐ.ஏ.) தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

அந்த விசாரணையில், சிறப்பு குழு இந்தியா முழுவதும் ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து அவர்கள் மூலம் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர் என்பதும் அவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்வதற்காக வெவ்வேறு சமூக வலைத்தளங்களை பயன்/////////////////டுத்தி வருவதும் தெரிய வந்துள்ளது./

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.