பாவூர்சத்திரத்தில் ரூ.4.5 கோடியில் ரெயில்வே மேம்பாலம்/தெற்கு ரெயில்வே அறிவிப்பு
1 min read
Rs 4.5 crore railway flyover at Pavoorchattaram. Southern Railway Notice
20.2.2022
பாவூர்சத்திரத்தில் ரூ.4.5 கோடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே மேம்பாலம்
தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே தற்போது ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் இங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், 9 மாதங்களில் மேம்பால பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணிக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு, மார்ச் 4-ந்தேதி டெண்டர் நிறைவு பெறும் எனவும் தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.