தமிழகத்தில் இன்று 788 பேருக்கு கொரோனா ; ஒருவர் சாவு
1 min read
Corona for 788 people in Tamil Nadu today; One is death
21.2.2022
தமிழகத்தில் இன்று 949 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 2,692 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (பிப்ரவரி 20 ம் தேதி) 949 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 21 ம் தேதி) பாதிப்பு 788 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 70,379 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 788 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,45,717 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 473 பேர் ஆண்கள், 315 பேர் பெண்கள். 2,692 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளகர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,93,703 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட் பாதிப்பு காரணமாக ஒருவர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவர் ஈரோடை சேர்ந்தவர், இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,981 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 223 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 21 ம் தேதி) 191 ஆக குறைந்துள்ளது.
நெல்லையில் இன்று 8 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 6 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.