July 7, 2025

Seithi Saral

Tamil News Channel

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது; எடப்பாடி கண்டனம்

1 min read

Former AIADMK minister Jayakumar arrested; Condemnation of Edappadi Palanisamy

21.2.2022
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

ஜெயக்குமார் கைது

சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் சென்னை தண்டையார் பேட்டை போலீசார், ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யபப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கண்டனம்

இதற்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, கள்ள ஓட்டு போட முயன்றவரை காவல் துறையில் ஒப்படைத்தது குற்றமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தது தவறு என முதல்-அமைச்சர் கூறுகிறாரா? எதையும் சட்டரீதியாக சந்திக்க அ.தி.மு.க. தயார். வெற்றி பெறும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தோல்வியுற்றதாக அறிவிக்க வாய்மொழி உத்தரவுகள் வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஒவ்வொரு வார்டு முடிவுகளை அறிவித்து, சான்றிதழ்களை வழங்கிய பிறகே அடுத்த வார்டு வாக்குகளை எண்ண வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.