அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி தோல்வி
1 min read
Retired IAS officer who competed in the coalition. Officer Sivagami failed
22.2.2022
அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி தோல்வி அடைந்தார்.
சிவகாமி
சமூக சமத்துவ படை தலைவரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி, சென்னை மாநகராட்சி தேர்தலில் அண்ணாநகர் மண்டலத்துக்குட்பட்ட 99-வது வார்டில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட்டார்.
அவருக்கு 2 ஆயிரத்து 423 வாக்குகள் கிடைத்தது. இந்த வார்டில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம் சுருதியிடம் 7 ஆயிரத்து 268 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.