பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 45 பேர் பலி
1 min read
Bomb blast at a mosque in Pakistan kills at least 45 people
4.3.2022
பாகிஸ்தான் மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்து, 45 பேர் பலியானார்கள்.
குண்டு வெடிப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் இருக்கும் பெஷாவர் நகரில் மசூதி ஒன்று உள்ளது. அங்கு இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் மசூதிக்குள் நுழைய முயன்றனர். அவர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 45 பேர் உடல் சிதறி பலியாகினர். 65 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.