சசிகலாவுடன் சந்தித்த ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க. இருந்து நீக்கம்
1 min read
O.P.S., who met with Sasikala. Brother O. Raja A.D.M.K. Dismissed from
5.2.2022
கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாக கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தேனி மாவட்ட ஆவின் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ.ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடிபழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கட்சியின் கொள்ளை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ.ராஜா, தேனி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் எஸ்.முருகேசன், தேனி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் வைகை .கருப்புஜி, கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் எஸ்.சேதுபதி ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், அங்கு தங்கியிருந்த அவரை, அதிமுக ஒருங்கிணைப்பாளரின் சகோதரரும், தேனி மாவட்ட ஆவின் தலைவருமான ஓ.ராஜா சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது./////////