20 மாநகராட்சி மேயர் பதவி, 125 நகராட்சி தலைவர் பதவிகள் தி.மு.க வசமானது
1 min read
The DMK holds 20 mayoral posts and 125 mayoral posts
5.3.2022
21 மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 20 மாநகராட்சிகளில் தி.மு.க. மற்றும் ஒரு மாநகராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
21 மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 20 மாநகராட்சிகளில் தி.மு.க. மற்றும் ஒரு மாநகராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன.
21 மாநகராட்சி துணை மேயர் பதவி இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 15 மாநகராட்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகம், 2 மாநகராட்சிகளில் இந்திய தேசிய காங்கிரஸ், தலா ஒரு மாநகராட்சியில் மறுமலர்ச்சி தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.ஐ (எம்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளன.
138 நகராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 125 இடங்களில் திராவிட தலைவா முன்னேற்றக் கழகம், 2 இடங்களில் அ.தி.மு.க. தலா ஒரு இடத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சுயேட்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 4 பதவி இடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை உள்ளிட்ட காரணமாக தேர்தல் நடைபெறவில்லை .
138 நகராட்சி துணைத்தலைவர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 98 இடங்களில் தி.மு.க., 9 இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ், 7 இடங்களில் அ.தி.மு.க, 4 இடங்களில் ம.தி.மு.க., தலா 2 இடங்களில் சி.பி.ஐ., சி.பி.ஐ (எம்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் 3 இடங்களில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 11 பதவியிடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை உள்ளிட்ட காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.
489 பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 395 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம், 20 இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ், 18 இடங்களில் அ.தி.மு.க., 8 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி, 3 இடங்களில் சி.பி.ஐ (எம்), தலா 2 இடங்களில் ம.தி.மு.க., அ.ம.மு.க., தலா 1 இடத்தில் சி.பி.ஐ., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி மற்றும் 25 இடங்களில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 13 பதவியிடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை உள்ளிட்ட காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.
489 பேரூராட்சி துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 331 இடங்களில் தி.மு.க., 32 இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ், 27 இடங்களில் அ.தி.மு.க., 11 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி, 5 இடங்களில் சி.பி.ஐ(எம்), தலா 3 இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலா 2 இடங்களில் சி.பி.ஐ., ம.தி.மு.க., அ.ம.மு.க., தலா 1 இடத்தில் தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி மற்றும் 34 இடங்களில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 35 பதவியிடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை உள்ளிட்ட காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.