ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்திய அணுமின் நிலையத்தில் தீப்பிடித்தது
1 min read
The nuclear plant at which the Russian army attacked was set on fire
5.3.2022
உக்ரைனில் உள்ள ஜாபோரி ஜியா அணுமின் நிலையம் மீது ரஷியா இன்று தாக்குதல்களை நடத்தியது.
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் அந்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை கைப்பற்றவும் தாக்குதல் நடத்தியது.
முதலில் செர்னோபில் அணுமின் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக ரஷியா அறிவித்தது. கைவிடப்பட்ட செர்னோபில் அணுமின் நிலையம் ரஷியா வசம் சென்று விட்டதால் பேரழிவு ஏற்படலாம் என்று உக்ரைன் தெரிவித்தது.
இதற்கிடையே உக்ரைனில் உள்ள ஜாபோரி ஜியா அணுமின் நிலையம் மீது ரஷியா நேற்று தாக்குதல்களை நடத்தியது. பின்னர் அந்த அணுமின் நிலையத்தை ரஷிய படைகள் கைப்பற்றியது. தாக்குதல் காரணமாக அணுமின் நிலைய முக்கிய கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த தீயை போராடி அணைத்தனர்.
அணுஉலை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பீதி நிலவி வருகிறது.
இதுகுறித்து உக்ரைன் அரசு கூறும்போது, “செர்னோபில் மற்றும் புகுஷிமா போன்ற அணுமின் நிலைய விபத்துக்களை விட ஜபோரி ஜியாவில் அணுசக்தி பேரழிவு மோசமாக இருக்கலாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் ஜபோரி ஜியா அணுஉலை நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய பகுதிகளில் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் அந்த அணுமின் நிலையத்தில் இருந்து கதிர் வீச்சு கசிவு ஏற்பட்டுவிடுமோ என்ற பெரும் பீதி நிலவி வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
ஜபோரி ஜியா அணுமின் நிலையம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷிய படை, ஜபோரி ஜியா அணுமின் நிலையத்தை கைப்பற்றி இருக்கும் நிலையில் மேலும் ஒரு அணுமின் நிலையத்தை கைப்பற்ற தீவிரமாகி உள்ளது.
உக்ரைன் நாட்டில் உள்ள 2-வது பெரிய அணுமின் நிலையம் யுஷ்னோக்ரைன்ஸ்க் நகரில் உள்ளது. இந்த அணுமின் நிலையத்தை குறி வைத்து தாக்குதல் நடத்த ரஷியா தயாராகி வருகிறது.
தற்போது யுஷ்னோக்ரைன்ஸ்கில் உள்ள அணுமின் நிலையத்துக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் ரஷிய படைகள் உள்ளன. இதனால் விரைவில் 2-வது அணுமின் நிலையத்தையும் கைப்பற்ற தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே அணுமின் நிலையம் அருகே துப்பாக்கி சூடு நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.
விடுதலை சிறுத்தைக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் 7 பதவிகளை தி.மு.க.வினர் கைப்பற்றினர்
சென்னை மார்ச் 6-
விடுதலை சிறுத்தை கவுன்சிலர்களுக்கு எதிராக தி.மு.க.வினர் போட்டியிட்டதால் பிரச்சினை ஏற்பட்டது. நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கவுன்சிலர் எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவி, ஜெயங்கொண்டம், நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சி தலைவர் பதவி, திண்டிவனம், பெரியகுளம், ராணிப்பேட்டை ஆகிய நகராட்சிகளில் துணை தலைவர் பதவி மற்றும் பேரூராட்சியில் 3 தலைவர் பதவிகளும், 7 துணைத் தலைவர் பதவிகளும் வழங்கப்பட்டன.
நேற்று தேர்தல் நடந்த போது விடுதலை சிறுத்தை கவுன்சிலர்களுக்கு எதிராக தி.மு.க.வினர் போட்டியிட்டதால் பிரச்சினை ஏற்பட்டது. நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கவுன்சிலர் எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார்.
இதேபோல பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர், பெரியகுளம் நகராட்சி தலைவர், திருப்போரூர் பேரூராட்சி துணைத் தலைவர், வேப்பத்தூர், அனுமந்தம்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் தி.மு.க.வினர் போட்டியிட்டு பதவிகளை கைப்பற்றி உள்ளனர்.
காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஒரு சில இடங்களில் தி.மு.க. வினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர்.