உக்ரைனில் சண்டையிட கூலிப்படைகளை மேற்கத்திய நாடுகள் அனுப்புகின்றன; ரஷியா குற்றச்சாட்டு
1 min read
Western nations send mercenaries to fight in Ukraine; Russia indictment
5/3/2022
உக்ரைனில் சண்டையிட கூலிப்படைகளை மேற்கத்திய நாடுகள் அனுப்புவதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
கூலிப்படை
உக்ரைன் மீது ரஷியா 10-வது நாளாக இன்று போர் தொடுத்தது. உக்ரைனின் பல்வேறு நகங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகளுக்கு தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் துப்பாக்கி சண்டை நடக்கிறது. உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, மீட்பு பணிக்காக உக்ரைனின் வோல்னோவாகா, மரியுபோல் ஆகிய 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் சண்டையிட கூலிப்படைகளை மேற்கத்திய நாடுகள் அனுப்புவதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக ரஷிய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உக்ரைனில் சண்டையிட மேற்கத்திய நாடுகள் கூலிப்படைகளை அதிக அளவில் அனுப்பி வருகின்றன.
உக்ரைன் நிலப்பரப்பில் சண்டையிட இங்கிலாந்து, டென்மார்க், லிதுவேனியா, போலாந்து, குரோசியா தங்கள் நாட்டு குடிமக்களை அனுமதித்துள்ளன. தனியார் ராணுவ நிறுவனங்களில் அமெரிக்கா ஆள் எடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.
உக்ரைனிய இனக்குழுக்களை சண்டைக்கு அனுப்ப பிரான்ஸ் ராணுவம் திட்டமிட்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து அதிக அளவிலான போராளிகள் உக்ரைனில் சண்டையிட வர உள்ளனர்.
16 ஆயிரம் பேர்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கூற்றுப்படி, 16 ஆயிரம் வெளிநாட்டு போராளிகள் உக்ரைனுக்கு வர உள்ளனர். தென்கிழக்கு உக்ரைனில் கட்டுப்படுத்தப்படாத தேசியவாத வீரர்களுடன் (உக்ரைன் வீரர்கள்) போலாந்து எல்லை வழியாக வந்த குரேசியாவை சேர்ந்த 200 கூலிப்படையினர் ஏற்கனவே சேர்ந்துவிட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.